/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.92 ஆயிரம் மின் கட்டணம் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி
/
ரூ.92 ஆயிரம் மின் கட்டணம் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி
ரூ.92 ஆயிரம் மின் கட்டணம் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி
ரூ.92 ஆயிரம் மின் கட்டணம் வீட்டு உரிமையாளர் அதிர்ச்சி
ADDED : ஆக 06, 2025 12:22 AM
அம்பத்துார், அம்பத்துாரில் மெத்தை வியாபாரியின் வீட்டிற்கு வந்த 91,993 ரூபாய் மின் கட்டணத்தால், குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அம்பத்துார் அடுத்த அண்ணா நகர் மேற்கு, ஜெகதாம்பிகை தெருவைச் சேர்ந்தவர் நந்தகுமார், 52; மெத்தை வியாபாரி. இவர், பெற்றோர், மனைவி, மகனுடன் வசித்து வருகிறார்.
இவர் வீட்டில், ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில், 8,370 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாகவும், அதற்கான தொகை 91,993 ரூபாய் எனவும், நந்தகுமாரின் தந்தையான சுப்பிரமணி என்பவரின் மொபைல் போனுக்கு குறுஞ்செய்தி வந்துள்ளது.
இது குறித்து அண்ணா நகரில் அமைந்துள்ள, மின் கட்டண வசூல் மையத்திற்கு சென்று முறையிட்டு உள்ளார். கணினி கோளாறால் தவறு ஏற்பட்டிருக்கலாம் என, மின் வாரிய அலுவலர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அவர் கூறியதாவது:
கடந்த காலங்களில், என் வீட்டில் மாதம் 350 முதல் 450 யூனிட் வரையே, மின்சாரம் பயன்படுத்தப்படும். அதற்கு 1,500 ரூபாய் முதல் 2,000 ரூபாய்குள் மின்கட்டணமாக வரும்.
ஆனால், இந்த மாதம் 8,370 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதாகவும், அதற்கு 91,993 ரூபாய் மின் கட்டணமாகவும் வந்துள்ளது. என் வீட்டில் உள்ள மீட்டரை ஆய்வுக்கு உட்படுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

