/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மா.அரங்கநாதன் பெயரில் விருதுகள் வழங்கி கவுரவம்
/
மா.அரங்கநாதன் பெயரில் விருதுகள் வழங்கி கவுரவம்
ADDED : ஏப் 17, 2025 12:14 AM

சென்னை, 'முன்றில்' இலக்கிய அமைப்பு சார்பில், நடப்பு ஆண்டுக்கான 'மா.அரங்கநாதன் இலக்கிய விருது' வழங்கும் விழா, சென்னை அண்ணா சாலை, ஆயிரம் விளக்கில் உள்ள ராணி சீதை அரங்கத்தில் நேற்று நடந்தது.
மா.அரங்கநாதன் இலக்கிய விருதுகள் மற்றும் தலா ஒரு லட்சம் காசோலைகளை, பேராசிரியர் தமிழவன், கட்டுரையாளர் திருநாவுக்கரசு, கவிஞர் சண்முகம், ஆவணப்பட இயக்குனர் ரவிசுப்பிரமணியன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. எழுத்தாளர் சுஜாதா நடராஜன் வரவேற்றார்.
இதில், 'மா.அரங்கநாதன்' மற்றும் 'முன்றில்' வலைதளங்களை வெளியிட்டு, உச்ச நீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன் பேசியதாவது:
கடந்த 1980களில் தன்னைப் பற்றி மட்டும் சிந்திக்காமல், படைப்பாளிகளை கவுரவப்படுத்தி, அவர்களுக்கென விருது வழங்க வேண்டும் என்ற கருத்தை பதிவு செய்தவர் அரங்கநாதன்.
தமிழ் இலக்கியத்தை பற்றி கூற வேண்டும் என்றால், அதில் மா.அரங்கநாதனை தவிர்த்துவிட்டு கூற முடியாது என, அன்றே குறிப்பிட்டவர் பேராசியர் தமிழவன்.
கதைகள், கவிதைகள், தவிர உலக சினிமாவிலும், மிகப்பெரும் ஈடுபாடு கொண்டவர் மா.அரங்கநாதன். அவர் எழுதிய படைப்புகளில், பல படைப்புகள் அச்சுக்கு வராமல் உள்ளன. அவற்றை அச்சில் ஏற்ற முயற்சித்து வருகிறோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
-