/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நோயாளி உறவினருக்கு மருத்துவமனை அடையாள சீட்டு
/
நோயாளி உறவினருக்கு மருத்துவமனை அடையாள சீட்டு
ADDED : அக் 10, 2024 12:33 AM

சென்னை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில், 18,000க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர். எப்போதும் கூட்டம் நிறைந்து காணப்படுவதால், சில நேரங்களில், நோயாளிகளின் உடமை திருடுப்போகிறது.
இதை தவிர்க்கும் வகையிலும், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் உள்நோயாளிகள் உடன் இருக்கும் உறவினர்களின் கைகளில், 'டேக்' என்ற அடையாள சீட்டு அணியும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த முறையை, மருத்துவமனை முதல்வர் தேரணிராஜன் நேற்று துவங்கி வைத்து கூறியதாவது:
மருத்துவமனைக்கு பார்வையாளர்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தும் வகையில், நோயாளியின், இரண்டு உறவினர்களுக்கு, கைகளில் அணியக்கூடிய 'டேக்' வழங்கப்படும்.
அதன்படி, சாதாரண வார்டில் இருக்கும் நோயாளிகளின் உறவினருக்கு நீல நிற டேக் வழங்கப்படும். தீவிர சிகிச்சை நோயாளிகளின் உறவினர்களுக்கு மஞ்சள் நிற டேக், சிறப்பு சிகிச்சை நோயாளி உறவினர்களுக்கு பச்சை நிற 'டேக்' வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர்கூறினார்.