/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மருத்துவமனை நிர்வாக பயிற்சி 'தாட்கோ' இயக்குனர் தகவல்
/
மருத்துவமனை நிர்வாக பயிற்சி 'தாட்கோ' இயக்குனர் தகவல்
மருத்துவமனை நிர்வாக பயிற்சி 'தாட்கோ' இயக்குனர் தகவல்
மருத்துவமனை நிர்வாக பயிற்சி 'தாட்கோ' இயக்குனர் தகவல்
ADDED : மார் 15, 2024 12:24 AM
சென்னை, 'தாட்கோ' எனும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் மேம்பாட்டு கழகம் சார்பில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தைச் சேர்ந்தோருக்கு, பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படுகிறது.
அந்த வரிசையில், தாட்கோ வயிலாக, டி.சி.எஸ்., அயன் மற்றும் அப்போலோ மெட்ஸ்கில்ஸ் நிறுவனம் இணைந்து, நர்சிங் முடித்த மாணவர்களுக்கு, ஆறு வார கால, மருத்துவமனை நிர்வாக பயிற்சியை வழங்க உள்ளது.
இந்த பயிற்சிகள், முதல் இரண்டு வாரம் இணைய வழியிலும், அடுத்த நான்கு வாரங்கள் சென்னை, மதுரை, திருச்சி உள்ளிட்ட இடங்களில், குறிப்பிட்ட சில மருத்துவமனைகளிலும் வழங்கப்படுகிறது.
பயிற்சியில் சேர விரும்புவோர், www.tahdco.com என்ற இணைதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என, தாட்கோ மேலாண் இயக்குனர் கந்தசாமி நேற்று
தெரிவித்தார்.