/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுக்கு விடுதி கட்டணம் நிர்ணயம்
/
சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுக்கு விடுதி கட்டணம் நிர்ணயம்
சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுக்கு விடுதி கட்டணம் நிர்ணயம்
சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுக்கு விடுதி கட்டணம் நிர்ணயம்
ADDED : ஆக 01, 2025 03:38 PM
சென்னை: தனியார் மருத்துவ கல்லுாரிகளில், விடுதி, உணவு உள்ளிட்ட கட்டணங்களை அரசு நிர்ணயித்து, அதற்கான கட்டண பட்டியலை, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள, 36 அரசு மருத்துவ கல்லுாரிகள், மூன்று பல் மருத்துவ கல்லுாரிகள், 22 சுயநிதி மருத்துவ கல்லுாரிகள், நான்கு மருத்துவ பல்கலை, 20 சுயநிதி பல் மருத்துவ கல்லுாரிகள் போன்றவற்றுக்கான மாணவர் சேர்க்கையை, மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குனரகம் நடத்துகிறது.
இதில், சுயநிதி பல் மருத்துவ கல்லுாரிகளுக்கான கட்டணத்தை, மருத்துவ கட்டண நிர்ணய குழு சமீபத்தில் வெளியிட்டது. அதேநேரம், விடுதி மற்றும் உணவு உள்ளிட்ட காரணங்களை கூறி, அரசு நிர்ணயிக்கும் கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இவற்றை தவிர்க்க, சுயநிதி மருத்துவ கல்லுாரிகளுடன் ஆலோசித்து, அதன் அடிப்படையில், விடுதி, உணவு, போக்குவரத்து மற்றும் இதர கட்டணங்களையும், மருத்துவ கல்வி இயக்குனரகம் நேற்று வெளியிட்டுள்ளது. இதற்கு முன் கல்வி கட்டணம் மட்டும் வெளியிடப்பட்டு வந்தது. முதல் முறையாக, இந்த ஆண்டு விடுதி, உணவு, போக்குவரத்து கட்டணம் வெளியிடப்பட்டுள்ளது.