/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நேபாள சிறுவர்களை தாக்கிய ஹோட்டல் ஓனர் கைது
/
நேபாள சிறுவர்களை தாக்கிய ஹோட்டல் ஓனர் கைது
ADDED : அக் 18, 2024 12:15 AM
கே.கே.நகர், கே.கே.நகர் ஜவஹர் தெருவைச் சேர்ந்தவர் மகாலிங்கம், 42. இவர், கே.கே.நகர் ராஜமன்னார் சாலையில், ஹோட்டல் பாண்டியன்' என்ற பெயரில் உணவகம் நடத்தி வருகிறார்.
இவரது ஹோட்டலில் கடந்த ஆறு மாதங்களாக, நேபாள நாட்டைச் சேர்ந்த 17 வயது சிறுவர்கள் மூவர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள், அந்த ஹோட்டலில் உள்ள அறையில் தங்கியுள்ளனர்.
கடந்த 15ம் தேதி இவர்கள், தங்கள் நண்பர் ஒருவரை, தாங்கள் தங்கும் அறைக்கு அழைத்து வந்துள்ளனர். இதனால், ஹோட்டல் உரிமையாளர் மகாலிங்கம் வாக்குவாதம் செய்துள்ளார்.
பின், மகாலிங்கம் மற்றும் ஹோட்டல் ஊழியர்கள் இருவர் சேர்ந்து, சிறுவர்களை கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் காயமடைந்த சிறுவர்கள், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்த புகாரின்படி, கே.கே.நகர் போலீசார் விசாரித்தனர். சிறுவர்களை தாக்கிய ஹோட்டல் உரிமையாளர் மகாலிங்கம், சாலிகிராமத்தைச் சேர்ந்த பரோட்டா மாஸ்டர் தமிழரசன், 46, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 'பிரைட் ரைஸ்' மாஸ்டர் நாகப்பன், 27, ஆகிய மூவரை, நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.