ADDED : அக் 20, 2024 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, ஜீவா நகரை சேர்ந்தவர் ஆனந்தகுமார், 47. இவரது வீட்டில், கடந்த 27ம் தேதி நள்ளிரவில் புகுந்த மர்ம நபர் மொபைல்போன்கள், லேப்டாப் திருடி தப்பினர்.
பின் அதே பகுதி தினேஷ், 40 என்பவரின் வீட்டின் வெளியே நிறுத்தி வைத்திருந்த பைக், அருகில் வசிக்கும் சக்திவேல் என்பவரின் வீட்டில் இருந்த மொபைல்போன், ஐபேடையும் மர்ம நபர் திருடினார்.
திருவொற்றியூர், நெல்லிக்காரன் தெருவை சேர்ந்த ரவுடி நரேஷ்குமார், 21 என்பவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரைகைது செய்த போலீசார், ஆறு மொபைல்போன்கள், ஒரு லேப்டாப், ஒரு ஐபேட் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.