/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
திருச்சினாங்குப்பம் மீனவ குடியிருப்பு பணம் செலுத்திய 263 பேருக்கு வீடு
/
திருச்சினாங்குப்பம் மீனவ குடியிருப்பு பணம் செலுத்திய 263 பேருக்கு வீடு
திருச்சினாங்குப்பம் மீனவ குடியிருப்பு பணம் செலுத்திய 263 பேருக்கு வீடு
திருச்சினாங்குப்பம் மீனவ குடியிருப்பு பணம் செலுத்திய 263 பேருக்கு வீடு
ADDED : ஜூலை 12, 2025 12:18 AM

திருவொற்றியூர், திருச்சினாங்குப்பம் மீனவ குடியிருப்பில் பணம் செலுத்திய 263 பேருக்கு வீடு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
திருவொற்றியூர், திருச்சினாங்குப்பம் மீனவ குடியிருப்புகள், 2015ம் ஆண்டு அகற்றப்பட்டன. பின், 2019ல் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில், 35.63 கோடி ரூபாய் செலவில், திட்டப்பகுதி ஒன்றிற்கு 120 வீடுகள் என, மூன்று பிரிவாக 360 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
கடந்தாண்டு ஜூலையில் இந்த குடியிருப்பு முதல்வரால் திறக்கப்பட்டு, 352 பேருக்கு வீடுகள் ஒதுக்கீடு செய்யப்படவிருந்தது. மத்திய - மாநில அரசு மானியம் போக, பயனாளி பங்கீட்டு தொகையான 2.40 லட்சம் ரூபாயை மொத்தமாகவும் அல்லது வங்கி கடன் மூலம் செலுத்தவும் அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், வங்கி கடன் வட்டி தொகை அதிகமாக இருப்பதால், வட்டி இல்லாமல் கடன் பெற்று தர வேண்டும் என, அப்பகுதியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர், பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
ஊர் நிர்வாகத்தின் பேச்சின்போது, ஒருவரையொருவர் தாக்கிக் கொண்ட சம்பவங்களும் அரங்கேறின. பலகட்ட இழுபறிக்கு பின், 50 பயனாளிகள் முழு தொகையையும் கட்டியுள்ளனர். 213 பேர் வங்கி கடன் பெற்று, பங்கீட்டு தொகையை கட்டினர்.
அதன்படி, 263 பேருக்கும் நேற்று மதியம், காலடிப்பேட்டை - தனியார் திருமண மண்டபத்தில், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில், குலுக்கல் முறையில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
முதற்கட்டமாக, 20 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டதற்கான ஆணைகளை எம்.எல்.ஏ., வழங்கினார். மற்றவர்களுக்கான ஆணைகள் உடனே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

