/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பஸ், ரயில் வசதிகள் எப்படி? ஆன்லைனில் கருத்து கூற அழைப்பு
/
பஸ், ரயில் வசதிகள் எப்படி? ஆன்லைனில் கருத்து கூற அழைப்பு
பஸ், ரயில் வசதிகள் எப்படி? ஆன்லைனில் கருத்து கூற அழைப்பு
பஸ், ரயில் வசதிகள் எப்படி? ஆன்லைனில் கருத்து கூற அழைப்பு
ADDED : அக் 12, 2024 12:35 AM
சென்னை,
சென்னையில் மாநகர போக்குவரத்து, மினி பஸ், மெட்ரோ, புறநகர் மின்சார ரயில்கள் ஆகிய பொது போக்குவரத்து வசதிகள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில், மூன்றாவது முழுமை திட்டத்திற்கான தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன.
இதில், துறை வாரியாக பொதுமக்களின் தேவைகள் என்ன, எதிர்பார்ப்புகள் என்ன என்பது குறித்த விபரங்களை, சி.எம்.டி.ஏ., திரட்டி வருகிறது.
ஏற்கனவே, இதற்காக பல்வேறு வழிமுறைகளில் கருத்து கேட்பு நடத்தப்பட்டு இருந்தாலும், தற்போது புதிதாக ஒரு கருத்து கேட்பு பணிகளை, சி.எம்.டி.ஏ., துவக்கி உள்ளது.
இதன்படி, தினசரி நீங்கள், மினி பஸ், பேருந்து, மெட்ரோ அல்லது புறநகர் மின்சார ரயில், இடைப்பட்ட போக்குவரத்து வழிகள் ஆகியவற்றில் எதை அதிகம் பயன்படுத்துகிறீர்கள்?
இதேபோன்று, நகர்ப்புற வளர்ச்சியில், நீடித்த வீட்டுவசதி, மேம்படுத்தப்பட்ட பொது போக்குவரத்து, பசுமை இடங்கள், திடக்கழிவு மேலாண்மை ஆகியவற்றில் எதற்கு உயர் முன்னுரிமை அளிக்க வேண்டும் என, சமூக வலைதளங்கள் வாயிலாக, கருத்து கேட்டுள்ளது.
பொதுமக்கள், பல்வேறு தன்னார்வ அமைப்புகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் 'ஆன்லைன்' முறையில் பதில் அளித்து வருகின்றனர்.

