/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
குப்பையில் மனித எலும்பு வக்கீலிடம் விசாரணை
/
குப்பையில் மனித எலும்பு வக்கீலிடம் விசாரணை
ADDED : மார் 01, 2024 12:28 AM
திருமங்கலம்,சென்னை, திருமங்கலம் பகுதியிலுள்ள தனியார் பள்ளி அருகில், சில நாட்களுக்கு முன், குப்பையில் மனித மண்டை ஓடு, கால், தொடை உள்ளிட்ட எலும்பு துண்டுகள் சிதறிக் கிடந்தன.
அவற்றை, திருமங்கலம் போலீசார் பறிமுதல் செய்து விசாரித்தனர்.
விசாரணையில் அது, 10 ஆண்டுகளுக்கு மேல் பதப்படுத்தப்பட்டு, மருத்துவ பயிற்சிக்கு பயன்படுத்திய எலும்புகள் என தெரிந்தது. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், 11ம் தேதி ஒருவர், குப்பையுடன் எலும்புகளை வீசியது பதிவாகி இருந்தது.
விசாரணையில் அவர், திருமங்கலம் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற வழக்கறிஞர் மனோகர், 72, என தெரிந்தது.
அவரது மகன், கடந்த 2004ம் ஆண்டு, மருத்துவ படிப்பிற்காக சீனியர் மாணவர்களிடம் எலும்புகளை வாங்கி, ஆராய்ச்சி செய்துள்ளார்.
அவை பல ஆண்டுகளாக பயன்படுத்தாமல் கிடந்ததால், வீட்டை சுத்தம் செய்த போது எடுத்து, குப்பையில் வீசியதாக மனோகர் போலீசில் தெரிவித்துள்ளார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

