ADDED : நவ 09, 2025 04:31 AM

சென்னை:அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற இளநிலை பொறியாளர்கள், ஓய்வூதியம் கோரி உண்ணாவிதர போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எழும்பூர் ராஜரத்தின ஸ்டேடியத்தின் அருகே நடந்த போராட்டத்தில், 300க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்று, தி.மு.க., அரசுக்கு எதிராக கோஷம் எழுப்பினர்.
அப்போது, 2003ம் ஆண்டு இளநிலை உதவியார் முன்னேற் சங்க மாநில தலைவர் பார்த்தசாரதி கூறியதாவது:
கடந்த 2003ல், 11,500 பேர் அமைச்சு பணியில், தொகுப்பு ஊதியத்தில் வேலை பார்த்தோம். அப்போது, எங்களுக்கு 40 வயதை கடந்து விட்டது. பின் 2007ல் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, 2010ம் ஆண்டில், பல்வேறு துறைகளில் பணி நிரந்தரம் பெற்றோம். ஏழு ஆண்டுகள் பணியில் இருந்தோம்.
இதனால் எங்களுக்கு ஒய்வுவூதியம் கிடைக்கவில்லை, பெறுவதற்கு வழியில்லாமல் போனது. இதை எதிர்த்து 2013ல் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம். கடந்த 2023ல், ஒய்வூதியம் வழங்க நீதிபதி உத்தரவிட்டார்.
ஆனால், தமிழக அரசு தொடர்ந்து மேல்முறையீடு செய்து வருகிறது. இதனால் எங்களின் வாழ்வாதாரம் பாதித்து வருகிறது. முதல்வர் அலுவலகம், துறை செயலர் அலுவலகம் சென்றால் எங்களை விரட்டுகின்றனர்.இதே நிலை தொடர்ந்தால் வரும் சட்டசபை தேர்தலில் நாங்கள் பார்த்துக்கொள்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

