ADDED : ஜூலை 16, 2025 12:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை, மதுபோதையில் மனைவியை இரும்பு கம்பியால் தாக்கிய கணவரை, போலீசார் நேற்று கைது செய்தனர்.
சூளைமேடு பகுதியைச் சேர்ந்த 25 வயது பெண், தனியார் வங்கியில் பணிபுரிகிறார். இவருக்கும் கோபிநாத், 28, என்பவருக்கும், 2023ல் திருமணம் நடந்தது.
மதுபோதைக்கு அடிமையான கோபிநாத், ஜூன் 27ம் தேதி, மது போதையில் மனைவியை தகாத வார்த்தையால் பேசி 'பெல்ட்'டால் தாக்கியுள்ளார். அவரது மொபைல்போனை பறித்து சென்றுவிட்டார்.
வீட்டிலிருந்து தப்பிச்சென்ற மனைவி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். தொடர்ந்து சம்பவம் குறித்து சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் கோபிநாத்தை, நேற்று கைது செய்தனர். விசாரணையில், மனைவியை வேறு ஒருவருக்கு விருந்தாக்க முயன்றதும் தெரியவந்துள்ளது.

