/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவியின் மண்டையை உடைத்த கணவர் கைது
/
மனைவியின் மண்டையை உடைத்த கணவர் கைது
ADDED : ஏப் 15, 2025 12:38 AM
எம்.கே.பி., நகர், வியாசர்பாடி, சஞ்சய் நகர், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் மரியா செல்வி, 21. இவருக்கு, கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன், பாலாஜி, 30, என்பவருடன் திருமணமான நிலையில், மித்திலேஷ், 5, என்ற மகன் உள்ளார்.
இந்நிலையில், மரியா செல்வி கருத்து வேறுபாடு காரணமாக, கணவர் பாலாஜியை பிரிந்து, அவரது தாய் சரளா வீட்டில் வசித்து வருகிறார்.
மரியா செல்வி, நேற்று தன் வீட்டருகே உள்ள கடைக்கு சென்று, வீட்டிற்கு திரும்பிய போது, அவ்வழியே வந்த பாலாஜி, அவரிடம் வீண் தகராறு செய்து, செங்கல்லால் தலையில் அடித்துள்ளார்.
இதில், மரியா செல்வி படுகாயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதுகுறித்து, எம்.கே.பி., நகர் போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, சஞ்சய் நகரை சேர்ந்த பாலாஜியை கைது செய்தனர்.

