/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பிரிந்து வாழும் மனைவியின் பைக்கை எரித்த கணவர் கைது
/
பிரிந்து வாழும் மனைவியின் பைக்கை எரித்த கணவர் கைது
பிரிந்து வாழும் மனைவியின் பைக்கை எரித்த கணவர் கைது
பிரிந்து வாழும் மனைவியின் பைக்கை எரித்த கணவர் கைது
ADDED : ஜூலை 18, 2025 12:25 AM

கோயம்பேடு, மனைவியை பழிவாங்கும் நோக்கில், அவரது இருசக்கர வாகனத்தை தீ வைத்து எரித்த கணவரை, போலீசார் கைது செய்தனர்.
ஆழ்வார்திருநகர், ஸ்ரீலட்சுமி நகர், மூன்றாவது தெருவில் வசிப்பவர் செல்லம்மாள், 38. இவரது கணவர் சங்கர், 45. தம்பதிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, செல்லம்மாள் தனியாக வசித்து வருகிறார்.
இதனால் ஆத்திரம் அடைந்த சங்கர், அடிக்கடி மது அருந்தி செல்லம்மாள் வசிக்கும் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்துள்ளார்.
கடந்த 15ம் தேதி அதிகாலை, சத்தம் கேட்டதால், செல்லம்மாள் வீட்டின் வெளியில் வந்து பார்த்துள்ளார்.
அப்போது, வெளியில் நின்றிருந்த அவரது 'ஹோண்டா டியோ' மற்றும் 'ராயல் என்பீல்டு' ஆகிய இரு வாகனங்களும் தீயில் எரிந்துகொண்டிருந்தன. அங்கிருந்தோர் தீயை அணைத்தனர்.
புகாரின்படி, கோயம்பேடு போலீசார் விசாரித்தபோது, மனைவியை பழிவாங்கும் நோக்கில், சங்கர், வாகனங்களை பெட்ரோல் ஊற்றி எரித்தது தெரிந்தது.
இதையடுத்து, கோயம்பேடு போலீசார் சங்கரை கைது செய்து, நேற்று முன்தினம் இரவு சிறையில் அடைத்தனர்.