/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்குடியில் மனைவியை கொன்று குப்பையில் புதைத்த கணவர் கைது போதையில் உளறியதால் அம்பலம்
/
பெருங்குடியில் மனைவியை கொன்று குப்பையில் புதைத்த கணவர் கைது போதையில் உளறியதால் அம்பலம்
பெருங்குடியில் மனைவியை கொன்று குப்பையில் புதைத்த கணவர் கைது போதையில் உளறியதால் அம்பலம்
பெருங்குடியில் மனைவியை கொன்று குப்பையில் புதைத்த கணவர் கைது போதையில் உளறியதால் அம்பலம்
ADDED : ஜூலை 22, 2025 12:32 AM
துரைப்பாக்கம், மனைவியை கொன்று குப்பை கிடங்கில் புதைத்துவிட்டு தப்பிய கணவர், போதையில் நண்பர்களிடம் உளறியதால் போலீசில் சிக்கினார்.
பட்டினப்பாக்கத்தை சேர்ந்தவர் நவீன், 30. இவரது மனைவி லட்சுமி, 26. இவர்களுக்கு திருமணமாகி, எட்டு ஆண்டுகள் ஆகின்றன. மூன்று மகன்கள் உள்ளனர்.
இருவரும், பெருங்குடி குப்பை கிடங்கில், பிளாஸ்டிக், இரும்பு கழிவுகளை சேகரித்து விற்கும் தொழில் செய்து, அங்கு கொட்டகை அமைத்து வசித்தனர்.
நேற்று மதியம், துரைப்பாக்கம், சீவரம் பகுதியில் உள்ள ஒரு டாஸ்மாக் மதுக்கூடத்தில், நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து நவீன் மது அருந்தினார்.
போதையில், நண்பர் களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, 'மனைவியுடன் ஏற்பட்ட தகராறில், அவரை கொலை செய்து, குப்பை கிடங்கில் புதைத்து விட்டேன். இங்கு இருந்தால், போலீசார் என்னை பிடித்து விடுவர். அதனால் பட்டினப்பாக்கம் செல்கிறேன்' எனக்கூறிவிட்டு, அங்கிருந்து புறப்பட்டார்.
நண்பர்களில் ஒருவர், நவீன் சொன்ன தகவலை, துரைப்பாக்கம் போலீசாருக்கு தெரிவித்தார். நேற்று மாலை, லட்சுமியை கொன்று புதைத்த இடத்தை போலீசார் பார்வையிட்டனர்.
உடனே, பட்டினப்பாக்கம் விரைந்து சென்ற போலீசார், அங்குள்ள வீட்டில் போதையில் துாங்கி கொண்டிருந்த நவீனை கைது செய்து, சம்பவ இடத்திற்கு அழைத்து சென்று விசாரிக்கின்றனர்.
தாசில்தார் முன்னிலையில் உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் முயன்றனர். அப்போது, குப்பை கிடங்கில் இருள் சூழ்ந்து இருந்ததால், உடலை எடுக்க முடியவில்லை.
அதனால், இன்று உடலை தோண்டி எடுத்து, பிரேத பரிசோதனைக்கு அனுப்ப போலீசார் திட்டமிட்டுள்ளனர். கொலைக்கான காரணம் குறித்து, நவீனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.