ADDED : மார் 27, 2025 11:42 PM
புளியந்தோப்பு, புளியந்தோப்பு, கன்னிகாபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெயந்தி, 60. இவரின் கணவர் ராஜேந்திரன், 65. தம்பதிக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
மதுவுக்கு அடிமையான ராஜேந்திரன், கடந்த மூன்று ஆண்டுகளாக மனைவியை பிரிந்து தனியே வசித்து வருகிறார். நடிகர் விஜய்சேதுபதி வீட்டில், காவலாளியாக வேலை செய்து வந்தார்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட இவர், மீண்டும் மனைவியுடன் சேர வேண்டி, ஜெயந்தியிடம் வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால் ஜெயந்தி மறுத்துள்ளார்.
மேலும், வேறு ஒரு பெண்ணுடனும், ராஜேந்திரன் தொடர்பில் இருந்துள்ளார். இந்நிலையில், மனைவி தன்னை சேர்க்கவில்லை என்ற ஆத்திரத்தில், மது போதையில் கத்தியால் மனைவியை வெட்டி விட்டு தப்பியுள்ளார்.
இதில், ஜெயந்திக்கு கை மற்றும் மார்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. அவரை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜெயந்தி அளித்த புகாரின்படி, ராஜேந்திரனை புளியந்தோப்பு போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்.