/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவிக்கு கத்திக்குத்து கணவர் கைது
/
மனைவிக்கு கத்திக்குத்து கணவர் கைது
ADDED : ஏப் 30, 2025 12:51 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.பி.சத்திரம், டி.பி.சத்திரம், காமராஜர் நகர், 10வது குறுக்கு தெருவைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 38. இவரது மனைவி அனிதா, 35.
அடிக்கடி மொபைல் போனில் அனிதா பேசுவதால் சந்தேகமடைந்த, ரஞ்சித் குமார், இது தொடர்பாக தகராறு செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவும் வாக்குவாதம் ஏற்பட்டு, சமையல் அறையில் இருந்த காய்கறி வெட்டும் கத்தியால் அனிதாவை, ரஞ்சித்குமார் தாக்கியுள்ளனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து, காயமடைந்த அனிதாவை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
டி.பி.,சத்திரம் போலீசார், ரஞ்சித்குமாரை நேற்று கைது செய்து சிறையில் அடைத்தனர்.