/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவியை கத்தியால் வெட்டிய கணவர் கைது
/
மனைவியை கத்தியால் வெட்டிய கணவர் கைது
ADDED : செப் 26, 2025 12:37 AM
கொடுங்கையூர்:குடும்ப தகராறில், மனைவியை கத்தியால் வெட்டிய கணவரை, போலீசார் கைது செய்தனர்.
கொடுங்கையூர், கருணாநிதி மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் பாபு, 48. வெல்டிங் வேலை செய்கிறார். அவரது மனைவி குமரேஸ்வரி, 45. இவர்களுக்கு திருமணமாகி, 15 ஆண்டுகளான நிலையில், குழந்தை இல்லை.
இதனால், கணவன் - மனைவி, இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று அதிகாலை, மதுபோதையில் இருந்த பாபு, குமரேஸ்வரியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது ஆத்திரமடைந்த பாபு, வீட்டிலிருந்த கத்தியை எடுத்து, குமரேஸ்வரியை சரமாரியாக வெட்டினார். இதில், அவருக்கு இடது கட்டை விரல், வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.
குமரேஸ்வரியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து, அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். இது குறித்து, கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து, பாபுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.