/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவியிடம் ஆபாசமாக பேசியவரை 'நையப்புடைத்த' கணவருக்கு வலை
/
மனைவியிடம் ஆபாசமாக பேசியவரை 'நையப்புடைத்த' கணவருக்கு வலை
மனைவியிடம் ஆபாசமாக பேசியவரை 'நையப்புடைத்த' கணவருக்கு வலை
மனைவியிடம் ஆபாசமாக பேசியவரை 'நையப்புடைத்த' கணவருக்கு வலை
ADDED : ஜூலை 09, 2025 12:21 AM
கொளத்துார், கொளத்துார் பகுதியில், நேற்று முன்தினம் மாலை ஐஸ் விற்பனை செய்த நபரிடம், வாலிபர் ஒருவர் மதுபோதையில் ஐஸ் வாங்கி சாப்பிட்டு விட்டு, பணம் தராமல் ஆபாசமாக பேசி சென்றார்.
இதை கொளத்துார், அம்பேத்கர் நகரைச் சேர்ந்த காமராஜ், 52, என்பவர் தட்டிக் கேட்டார். ஆத்திரமடைந்த அந்த வாலிபர், காமராஜையும் அவரது மகள் சினேகாவையும் ஆபாசமாக பேசிவிட்டு சென்றார்.
இதை, தன் கணவர் தேவா வந்ததும் சினேகா கூறியுள்ளார். ஆத்திரமடைந்த தேவா, நண்பர்கள் மூவருடன் சென்று அந்த வாலிபரை சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதில் காயமடைந்த அந்த வாலிபர், பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொளத்துார் போலீசாரின் விசாரணையில், ஆபாசமாக பேசியது செங்குன்றம், ஸ்ரீ சாய் பாலாஜி நகரைச் சேர்ந்த அய்யனார், 28, என்பது தெரிந்தது. தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அய்யனாரை தாக்கிய தேவா தலைமறைவாக உள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.