/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மனைவியை உருவ கேலி செய்த கணவருக்கு வலை
/
மனைவியை உருவ கேலி செய்த கணவருக்கு வலை
ADDED : ஜூலை 20, 2025 11:33 PM
திருவொற்றியூர்:மனைவியின் உடல் எடையை கேலி செய்த கணவரை, போலீசார் தேடி வருகின்றனர்.
தண்டையார்பேட்டையைச் சேர்ந்தவர் ஷமீமா பாத்திமா, 23. இவருக்கும் துாத்துக்குடி மாவட்டம், கயத்தாறு பகுதியைச் சேர்ந்த அஜ்முல்தீன் என்பவருக்கும், 2021 ஜூன் 27ம் தேதி திருமணம் நடந்தது. இவர்களுக்கு, ஒரு பெண் குழந்தை உள்ளது.
திருமணமான நாளில் இருந்து, அஜ்முல்தீன் தன் மனைவியிடம் வரதட்சணை கேட்டு பிரச்னை செய்து வந்துள்ளார். தவிர, உடல் எடை, நிறத்தை குறித்து உருவ கேலி செய்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, உடல் எடையை சரிசெய்ய, அப்பெண்ணின் தந்தை மாதந்தோறும், 40,000 ரூபாய் கொடுத்து வந்துள்ளார். இதற்கிடையில், பெண்ணிடம் இருந்து 56 சவரன் நகைகளை, அஜ்முல்தீனின் குடும்பத்தினர் பறித்துக் கொண்டு, மீண்டும் பணம் கேட்டு மிரட்டல் விடுப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து, அப்பெண் 'போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும்' என, திருவொற்றியூர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவின்படி, திருவொற்றியூர் அனைத்து மகளிர் போலீசார், பெண்ணை கொடுமைப்படுத்துதல் உட்பட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக இருக்கும் அஜ்முல்தீனை தேடி வருகின்றனர்.