/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிங்கார சென்னை அட்டை பஸ்சில் செயல்பட்டால் 'மெட்ரோ'வில் 'பிளாக்'
/
சிங்கார சென்னை அட்டை பஸ்சில் செயல்பட்டால் 'மெட்ரோ'வில் 'பிளாக்'
சிங்கார சென்னை அட்டை பஸ்சில் செயல்பட்டால் 'மெட்ரோ'வில் 'பிளாக்'
சிங்கார சென்னை அட்டை பஸ்சில் செயல்பட்டால் 'மெட்ரோ'வில் 'பிளாக்'
ADDED : அக் 13, 2025 04:55 AM
சென்னை: சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி மாநகர பேருந்தில் பயணித்த பின், மெட்ரோ ரயிலுக்கு சென்றால், அட்டையை பயன்படுத்த முடியாமல், 'பிளாக்' ஆவதால் பயணியர் அவதிப்பட்டு வருகின்றனர்.
மெட்ரோ ரயிலில் பயணிக்க வசதியாக, 'சிங்கார சென்னை அட்டை' 2023ம் ஆண்டு அறிமுகமானது. இந்த அட்டையை மாநகர பேருந்துகளிலும் பயன்படுத்தும் திட்டம், கடந்த ஜன., 6ம் தேதி துவக்கப்பட்டது.
இதனால், சிங்கார சென்னை அட்டை விற்பனை அதிகரித்து, தினமும் பல ஆயிரக்கணக்கானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால், சமீப காலமாக மாநகர பேருந்துகளில், இந்த அட்டையை பயன்படுத்தும்போது, அடிக்கடி சர்வர் பிரச்னை ஏற்பட்டு டிக்கெட் பெறுவதில் சிக்கல் உள்ளது.
இந்நிலையில், இந்த அட்டையை பயன்படுத்தி, மாநகர பேருந்தில் பயணம் செய்த பின், மெட்ரோ ரயிலில் பயணிக்க செல்லும்போது, நுழைவு பகுதியிலேயே 'பிளாக்' ஆகிவிடும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர்.
இதுகுறித்து, பயணியர் சிலர் கூறியதாவது:
சிங்கார சென்னை அட்டையை, மாநகர பேருந்தில் பயன்படுத்தும்போது, சில நேரங்களில், 'சர்வர்' பிரச்னை ஏற்படும்; சிறு நேரத்தில் சரியாகி விடும். ஆனால், தற்போது, மாநகர பேருந்தில் பயன்படுத்தி விட்டு, மெட்ரோவில் பயணிக்க செல்லும்போது நுழைவு பகுதியிலேயே, 'கார்டு பிளாக்' என வருகிறது.
அங்குள்ள அலுவலர்களிடம் கேட்டால், பேருந்தில் பயன்படுத்தியபோது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு இருக்கும் என்கின்றனர். இதனால், பயணியர் அவதிப்படுகின்றனர். சிங்கார சென்னை அட்டையை பயன்படுத்தி, பேருந்து, மெட்ரோ ரயில்களில் தடையின்றி செல்ல நிர்வாகம் உரிய நடவடிக்கை வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பயணியர் கூறியுள்ள புகார் குறித்து, ஆய்வு நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தொழில்நுட்ப குளறுபடிகள் சரி செய்யப்படும்' என்றனர்.