/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஐ.ஐ.டி., 66வது நிறுவன தினத்தில் சாதனையாளர்களுக்கு பாராட்டு
/
ஐ.ஐ.டி., 66வது நிறுவன தினத்தில் சாதனையாளர்களுக்கு பாராட்டு
ஐ.ஐ.டி., 66வது நிறுவன தினத்தில் சாதனையாளர்களுக்கு பாராட்டு
ஐ.ஐ.டி., 66வது நிறுவன தினத்தில் சாதனையாளர்களுக்கு பாராட்டு
ADDED : ஏப் 24, 2025 12:36 AM

சென்னை, ஏப்
சென்னை ஐ.ஐ.டி.,யின் 66வது நிறுவன தினத்தையொட்டி, பல்வேறு பிரிவுகளில் சாதித்தவர்கள் பாராட்டப்பட்டனர்.
சென்னை ஐ.ஐ.டி.,யின் 66வது நிறுவன தினம் நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில், அனுசந்தன் தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை தலைமை நிர்வாக அதிகாரி ஷிவ்குமார் கல்யாணராமன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அவருக்கு, புகழ்பெற்ற முன்னாள் மாணவர் என்ற விருது வழங்கப்பட்டது.
அவர் பேசியதாவது:
மனித மூலதனத்தின் அடுத்த தலைமுறையை உருவாக்கும் நிறுவனமாக, சென்னை ஐ.ஐ.டி., உள்ளது. அடிப்படை ஆராய்ச்சியில் இருந்து, பயன்பாடுகளுக்கு செல்வதற்கான பாதை மிகவும் நுட்பமும், சவாலும் நிறைந்தது. சென்னை ஐ.ஐ.டி., அதை சாத்தியப்படுத்தி, தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
இது, சிறிய நிறுவனங்கள் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை வளர்க்கிறது. மூலதன முதலீடுகளை ஈர்க்கும் தனியார் துறை ஆதரவை பெற முயற்சிக்கிறது.
இது, அரசு மற்றும் சமூகத்துடன் இணைந்த, சமூகத்துக்கான ஆராய்ச்சியாக மாறும்போது, பெரும் பொருளாதார, சமூக மாற்றங்களை அடையும். அதை நோக்கிய பயணத்தை முன்னெடுக்க வேண்டும்.
இவ்வாறு ஷிவ்குமார் கல்யாணராமன் பேசினார்.
சென்னை ஐ.ஐ.டி.,யின் இயக்குனர் காமகோடி பேசியதாவது:
வேலைக்குச் செல்வது மட்டுமே படிப்புக்கான வழியல்ல என்பதை விளக்கும் தொழில் வழிகாட்டி மையம், கடந்த கல்வியாண்டில், 95 சதவீதம் பேரை தொழில்முனைவோராக ஆக்கியுள்ளது.
விரைவில், சென்னை ஐ.ஐ.டி., குவாண்டம் தொழில்நுட்பம், பின்டெக் மற்றும் நிலைத்தன்மைக்கான இன்குபேட்டர்களை உருவாக்கும்.
நம் மாணவர்கள் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில், மத்திய சிவில் சர்வீஸ் பணிகளுக்குச் செல்லவும் வழிகாட்டுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.
***

