/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கல்லுாரிகளுக்கான டென்னிஸ் போட்டி ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஒட்டுமொத்த சாம்பியன்

ADDED : நவ 05, 2025 01:20 AM

சென்னை: கிண்டியில் நடந்த கல்லுாரிகளுக்கு இடையிலான டென்னிஸ் போட்டியில், ஐ.ஐ.டி., மெட்ராஸ் அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
கிண்டி, ஐ.ஐ.டி., சார்பில், 2025 - விளையாட்டு திருவிழா என்ற தலைப்பில், 12 வகையான விளையாட்டு போட்டிகள், 'லீக்' மற்றும் 'நாக் அவுட்' முறையில் நடத்தப்பட்டன.
டென்னிஸ்: ஒன்பது அணிகள் மோதிய டென்னிஸ் போட்டியில், ஆண்கள் தனிநபர் மற்றும் இரட்டையரில், ஐ.ஐ.டி., மெட்ராஸ் அணி வெற்றி பெற்றது. பெண்கள் தனிநபரில் எத்திராஜ், இரட்டையரில் ஐ.ஐ.டி., மெட்ராஸ் வெற்றி பெற்றது. இதன் வாயிலாக, டென்னிஸ் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஐ.ஐ.டி., மெட்ராஸ் அணி கைப்பற்றியது.
கால்பந்து: 11 அணிகள் மோதிய ஆட்டத்தில், நியூ கல்லுாரி முதலிடத்தையும், நாசரேத் கல்லுாரி இரண்டாமிடத்தையும், ஐ.ஐ.டி., மெட்ராஸ் மூன்றாம் இடத்தையும் பெற்றன.
கூடைப்பந்து: 15 அணிகள் மோதிய ஆட்டத்தில், ஆண்களில் சென்னை வி.ஐ.டி., முதலிடத்தையும், ஐ.ஐ.டி., மெட்ராஸ் இரண்டாமிடத்தையும், குருநானக் மூன்றாம் இடத்தையும் கைப்பற்றின. பெண்களில், ஹிந்துஸ்தான், செயின்ட் ஜோசப், ஐ.ஐ.டி., மெட்ராஸ் ஆகியவை முறையே மூன்று இடங்களை வென்றன.