/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்ரீராமச்சந்திராவில் ஒருங்கிணைந்த புற்றுநோய் சிகிச்சை மையம் திறப்பு

ADDED : நவ 05, 2025 12:27 AM
சென்னை: சென்னை போரூரில் உள்ள ஸ்ரீ ராமச்சந்திரா உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில், புற்றுநோய் சிகிச்சைக்கான அனைத்து மருத்துவ சேவைகளையும் ஒருங்கிணைந்து வழங்குவதற்கான சிறப்பு மையம் திறக்கப்பட்டுள்ளது.
சிறப்பு மையத்தை, நிறுவன வேந்தர் வி.ஆர்.வெங்கடாசலம் தலைமையில், சென்னை புற்றுநோய் மையத்தின் துணை செயல் தலைவர் எப்.ஹேமந்த்ராஜ் திறந்து வைத்தார்.
இதுகுறித்து, டாக்டர் ஹேமந்த்ராஜ் கூறியதாவது:
புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதுடன், நோயாளிகளுடன் நேரம் செலவிட்டு, அவர்களின் கவலைகளை கேட்டு, உணர்ச்சி ரீதியான ஆதரவை டாக்டர்கள் வழங்க வேண்டும்.
நோயாளிகளின் குடும்பத்தினரிடம் நோயின் தன்மை மற்றும் சிகிச்சை முறைகளை பற்றியும் விளக்க வேண்டும்.
சென்னை புற்றுநோய் மையத்தின் நோயாளிகளின் பதிவேடு, ஸ்ரீ ராமச்சந்திரா பதிவேட்டுடன் இணைக்கப்படுவதன் வாயிலாக சிகிச்சை முறைகள் மேம்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.