/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ஸ்குவாஷ் போட்டியில் ஐ.ஐ.டி., முதலிடம்
/
ஸ்குவாஷ் போட்டியில் ஐ.ஐ.டி., முதலிடம்
ADDED : நவ 01, 2025 11:37 PM

சென்னை: சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் நடக்கும் விளையாட்டு திருவிழாவில், ஸ்குவாஷ் போட்டியில் ஐ.ஐ.டி., அணி முதலிடம் பிடித்தது.
கிண்டியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., வளாகத்தில் விளையாட்டு திருவிழா நேற்று முன்தினம் துவங்கின.
இதில், டேபிள் டென்னிஸ், பேட்மின்டன், டென்னிஸ், கிரிக்கெட், ஸ்குவாஷ் உள்ளிட்ட, 12 வகையான போட்டிகள் நடக்கின்றன.
ஒவ்வொரு போட்டியிலும், கல்லுாரி மற்றும் பல்கலை என, 15க்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. போட்டிகள், லீக், நாக் அவுட் மற்றும் சூப்பர் லீக்' அடிப்படையில் நடக்கின்றன.
கூடைப்பந்து நேற்று நடந்த ஆடவர் கூடைப்பந்தில் குருநானக் கல்லுாரி, 85 - 40 என்ற கணக்கில் செயின்ட் பேட்ரிக்ஸ் அணியையும், அண்ணா பல்கலை, 50 - 43 என்ற கணக்கில் சவிதா மருத்துவ இன்ஸ்டிடியூட் அணியையும் வீழ்த்தின.
பெண்கள் பிரிவில், எத்திராஜ் அணி, 40 - 39 என்ற கணக்கில் அண்ணா பல்கலையையும், செயின்ட் ஜோசப் கலை கல்லுாரி, 39 - 12 என்ற கணக்கில் சென்னை வி.ஐ.டி., அணியையும் தோற்கடித்தன.
பேட்மின்டன் லயோலா அணி, 3 - 2 என்ற செட் கணக்கில் குருநானக் கல்லுாரியையும், லயோலா அணி, 2 - 0 என்ற கணக்கில் மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யையும் வீழ்த்தின.
ஸ்குவாஷ் பெண்களுக்கான பிரிவில் ஸ்குவாஷ் போட்டிகள் முடிவில், கிண்டி ஐ.ஐ.டி., மெட்ராஸ் 'ஏ' அணி முதலிடத்தையும், லயோலா, ஐ.ஐ.டி., மெட்ராஸ் - பி, சென்னை வி.ஐ.டி., அணிகள், முறையே இரண்டு முதல் மூன்று இடங்களையும் வென்றன.
ஆண்களில் டி.ஜி.வைஷ்ணவா அணி முதலிடத்தையும், ஐ.ஐ.டி., மெட்ராஸ் இரண்டாமிடத்தையும் கைப்பற்றின. ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, ஐ.ஐ.டி., விளையாட்டு ஆலோசகர் அருள் பிரகாஷ் பரிசுகளை வழங்கினார். உடன் பயிற்சியாளர் அசோக் யாதவ் உள்ளிட்டோர் இருந்தனர்.

