/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெருங்குடியில் ஆக்கிரமித்த ஓ.எஸ்.ஆர்., நிலத்தின் முறைகேடு பட்டா ரத்து
/
பெருங்குடியில் ஆக்கிரமித்த ஓ.எஸ்.ஆர்., நிலத்தின் முறைகேடு பட்டா ரத்து
பெருங்குடியில் ஆக்கிரமித்த ஓ.எஸ்.ஆர்., நிலத்தின் முறைகேடு பட்டா ரத்து
பெருங்குடியில் ஆக்கிரமித்த ஓ.எஸ்.ஆர்., நிலத்தின் முறைகேடு பட்டா ரத்து
ADDED : நவ 17, 2025 03:21 AM

பெருங்குடி: பெருங்குடி சந்தோஷ் நகரில், பொது பயன்பாட்டிற்கான நிலத்தின் முறைகேடு பட்டாவை, அதிகாரிகள் ரத்து செய்துள்ளனர்.
பெருங்குடி மண்டலம், வார்டு 182ல் அமைந்துள்ள சந்தோஷ் நகர், பர்மா காலனி ஆகிய பகுதிகள், 40 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டன.
இப்பகுதிகளில் மனைப்பிரிவுகள் உருவாக்கும்போது ஒதுக்கப்பட்ட, பொது பயன்பாட்டிற்கான ஓ.எஸ்.ஆர்., நிலத்தை, முறைகேடாக பட்டா தயாரித்து, தனியார் சிலர் ஆக்கிரமித்துள்ளனர்.
இதில், சந்தோஷ் நகரில் பூங்கா, பூங்கா செல்லும் பாதை, பள்ளி இடம் என, 8 கிரவுண்டு நிலமும், ஓ.எம்.ஆர்., அருகே உள்ள பர்மா காலனியில், 12.5 கிரவுண்டு நிலமும் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இதன் தற்போதையை மதிப்பு, 150 கோடி ரூபாய்.
சந்தோஷ் நகரின் பொது பயன்பாட்டிற்கான இடத்தில், சர்வே எண்: 126/7, 127/25, 127/55 ஆகிய முறைகேடான பட்டாக்களை ரத்து செய்து, சந்தோஷ் நகர் தலைவர் பெயரில் நிலைநிறுத்த, தென் சென்னை கோட்டாட்சியர், சோழிங்கநல்லுார் வட்டாட்சியருக்கு, ஜூன் 27ல் உத்தரவிட்டும், மூன்று மாதங்களுக்கும் மேலாக, இதன் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதுகுறித்த விரிவான செய்தி, கடந்த 14ம் தேதி நம் நாளிதழில் வெளிவந்தது. அதன் விளைவாக, துரிதமாக செயல்பட்ட அதிகாரிகள், முதற்கட்டமாக தனியார் பெயரிலுள்ள குறிப்பிட்ட சர்வே எண்களை ரத்து செய்து, சந்தோஷ் நகர் தலைவருக்கு பட்டா மாற்றம் செய்து, இணையப் பட்டாவை, மனுதாரருக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து அனுப்பியுள்ளனர்.

