/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சிவப்பு நிறமான கொரட்டூர் ஏரி நீர்
/
சிவப்பு நிறமான கொரட்டூர் ஏரி நீர்
ADDED : நவ 17, 2025 12:53 AM

அம்பத்துார்: அம்பத்துார் தொகுதியில் உள்ள கொரட்டூர் ஏரி, 590 ஏக்கர் பரப்பளவு கொண்டது. அம்பத்துார் தொழிற்பேட்டை மற்றும் பட்டரைவாக்கம் பகுதியில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுநீர், வடிகால் வாயிலாக ஒண்டிவீரன் மதகு வழியாக கொரட்டூர் ஏரியில் கலக்கிறது.
இந்நிலையில், நேற்று காலை கொரட்டூர், ஒண்டிவீரன் கோவில் அருகே உள்ள மதகு பகுதியில், அதிகபடியான ரசாயனம் கலந்த கழிவுநீர் ஏரிக்குள் சென்றதால், ஏரி நீர் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.
இது குறித்து, கொரட்டூர் ஏரி பாதுகாப்பு மக்கள் இயக்கத்தினர் கூறியதாவது:
கடந்த சில நாட்களாக இப்பகுதியில் மழை பொழிவு இல்லை. ஆனாலும் ஏரியின் மதகு திறக்கப்படுகிறது. அதன் வழியாக நஞ்சு கலந்த ரசாயன நீர் ஏரிக்குள் சென்று கலக்கிறது.
இதனால், ஏரி நீர் சிவப்பு மற்றும் கருப்பு நிறத்தில் காட்சியளிக்கிறது. சென்னை மாநகராட்சி, தொழிற்சாலைகளுக்கு சாதகமாக செயல்பட்டு, ஏரியை பாழாக்குகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

