/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பம் நிரப்ப உதவ கோரி தீர்மானம்
/
எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பம் நிரப்ப உதவ கோரி தீர்மானம்
எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பம் நிரப்ப உதவ கோரி தீர்மானம்
எஸ்.ஐ.ஆர்., விண்ணப்பம் நிரப்ப உதவ கோரி தீர்மானம்
ADDED : நவ 17, 2025 12:49 AM
சோழிங்கநல்லுார்: சோழிங்கநல்லுார் தொகுதியில், எஸ்.ஐ.ஆர்., படிவம் நிரப்ப தெரியாத மக்களுக்கு, அந்தந்த நலச்சங்க நிர்வாகிகள் உதவ வேண்டும் என, நலச்சங்கங்களின் பேரமைப்பு தீர்மானம் நிறைவேற்றியது.
சோழிங்கநல்லுார் தொகுதி குடியிருப்போர் நலச்சங்கங்களின் பேரமைப்பு சார்பில், நேற்று செயற்குழு கூட்டம் கூடியது. இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
எஸ்.ஐ.ஆர்., விண்ணப்ப படிவம் நிரப்ப தெரியாத, சந்தேகம் எழும் மக்களுக்கு, அந்தந்த பகுதி சங்க நிர்வாகிகள் உதவ வேண்டும்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை, ராம்சார் பகுதி என எல்லை நிர்ணயம் செய்துள்ளதால், 1 கி.மீ., துாரத்தில் கட்டுமான பணிகளுக்கு அனுமதி வழங்கவில்லை.
ஆக்கிரமிப்பு இல்லாத இடத்தை எல்லை நிர்ணயம் செய்து, வேலி அமைத்து, மீதமுள்ள வீட்டுமனை பகுதிகளுக்கு கட்டட அனுமதி வழங்க வேண்டும்.
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

