ADDED : நவ 17, 2025 12:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாம்பரம்: தாம்பரம் பகுதியை சேர்ந்த ரமேஷ்குமார், 35, என்பவர், நேற்று காலை தாம்பரம் ஹிந்து மிஷன் மருத்துவமனை அருகே சாலையில் நடந்து சென்றார்.
அப்போது, ஒரே பைக்கில் வந்த மர்ம நபர்கள் மூவர், ரமேஷ்குமாரிடம் இருந்த மொபைல் போனை பறித்து தப்பி சென்றனர். இதுகுறித்து தகவல் அறிந்த தாம்பரம் போலீசார், கண்காணிப்பு கேமரா காட்சிகளை சேகரித்து, மொபைல் போன் பறித்து சென்றவர்களை தேடி வருகின்றனர்.

