ADDED : நவ 04, 2026 12:29 PM

அ நிறம் | அளவு
சென்னை: சென்னையில் விதிகளை மீறி வைக்கப்பட்டிருந்த 23 பிரமாண்ட விளம்பர பேனர்களை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அகற்றினர்.
உரிய அனுமதியின்றியும், வலுவான அஸ்திவாரம் இன்றியும் விளம்பர பேனர்கள் அமைக்கப்படுவதால் விபத்து அபாயம் நிலவுவது குறித்து நம் நாளிதழில் புகைப்படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, தேனாம்பேட்டை மண்டலத்தில் நேற்று முன்தினம் ஏழு சட்டவிரோத பேனர்கள் அகற்றப்பட்டன. தொடர்ந்து, நேற்று ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அருகே வைக்கப்பட்டிருந்த ஏழு பேனர்கள் உட்பட 23 பேனர்களை, மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.
மேலும், மண்டலத்தில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் பாரபட்சமின்றி தொடர்ந்து அகற்றப்படும் என, மண்டல அதிகாரி செந்தில்குமரன் தெரிவித்தார்.
