/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வியாபாரியை கார் ஏற்றி கொன்ற வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் கூட்டாளி சிக்கினர்
/
வியாபாரியை கார் ஏற்றி கொன்ற வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் கூட்டாளி சிக்கினர்
வியாபாரியை கார் ஏற்றி கொன்ற வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் கூட்டாளி சிக்கினர்
வியாபாரியை கார் ஏற்றி கொன்ற வழக்கில் மனைவி, கள்ளக்காதலன் கூட்டாளி சிக்கினர்
ADDED : ஜன 05, 2024 12:25 AM

அயனாவரம், அயனாவரத்தைச் சேர்ந்தனர் பிரேம்குமார், 37; வில்லிவாக்கத்தில் பழைய பேப்பர் கடை நடத்தினார். இவரது மனைவி பிரியா, 32. இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த 1ம் தேதி இரவு, அண்ணா நகர் நியூ ஆவடி சாலையில், கார் மோதிய விபத்தில், சம்பவ இடத்திலேயே பிரேம்குமார் இறந்தார்.
அண்ணா நகர் போக்கு வரத்து போலீசார் விசாரித்து, விபத்து ஏற்படுத்திய அயனாவரத்தைச் சேர்ந்த ஹரிகிருஷ்ணன், 30, என்பவரை கைது செய்து சிறையில் அடைத்து, மற்றொருவரை தேடினர்.
பிரேம்குமாரின் இறப்பில், மனைவி பிரியாவுக்கு தொடர்பு இருப்பதாக, அவரது அக்கா சங்கீதா, அண்ணா நகர் போலீசில் புகார் அளித்தார். பிரியாவும், கணவர் இறப்பு குறித்து புகார் அளித்தார்.
முதற்கட்ட விசாரணையில், பிரேம்குமார் மனைவி பிரியாவிற்கு, ஹரிகிருஷ்ணன் என்பவருடன் தொடர்பு இருந்ததும், அதனால் தம்பதியிடையே பிரச்னை இருந்ததும் தெரிந்தது.
ஹரிகிருஷ்ணன் மொபைல் போனை ஆய்வு செய்ததில், இருவருக்கும் உள்ள கள்ளத்தொடர்பு உறுதியானது.
பிரேம்குமார் இதற்கு இடையூறாக இருந்ததால், இருவரும் திட்டமிட்டு, ஆந்திராவைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் உதவியுடன், கார் ஏற்றி கொலை செய்தது தெரிந்தது. இதற்காக, நான்கு பேர் கைமாறிய பழைய காரை விலைக்கு வாங்கி சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.
சம்பவம் நடந்த இடம் அடிப்படையில், வழக்கு அயனாவரம் போலீசுக்கு நேற்று மாற்றப்பட்டது. இதற்கிடையில், கொலைக்கு உடந்தையாக இருந்த சரத்குமாரை, தனிப்படை போலீசார் கோவையில் கைது செய்து, நேற்று இரவு அயனாவரம் அழைத்து வந்தனர்.
பிரியா மற்றும் சரத்குமாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரிக்கின்றனர். கொலை வழக்காக பதிவு செய்து, விசாரணைக்குப் பின், இன்று இருவரையும் சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது.