/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
லாரி ஓட்டுனர் இறப்பில் திருப்பம் மனைவியே கொன்றது அம்பலம்
/
லாரி ஓட்டுனர் இறப்பில் திருப்பம் மனைவியே கொன்றது அம்பலம்
லாரி ஓட்டுனர் இறப்பில் திருப்பம் மனைவியே கொன்றது அம்பலம்
லாரி ஓட்டுனர் இறப்பில் திருப்பம் மனைவியே கொன்றது அம்பலம்
ADDED : நவ 07, 2024 12:32 AM

கொளத்துார்,
கொளத்துார், பவானி நகரைச் சேர்ந்தவர் ராஜசேகர், 45; லாரி ஓட்டுனர். இவரது மனைவி சித்ரா, 42. இவர்களுக்கு, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
கடந்த அக்.. 31ம் தேதி தீபாவளியன்று காலை முதலே மது அருந்திய ராஜசேகர், மாலையில் மது போதையில் வீட்டுக்கு சென்றுள்ளார். துாங்கிக் கொண்டிருந்த ராஜசேகரை, இரவு 7:30 மணியளவில் அவரது மனைவி எழுப்பியபோது எழுந்திருக்கவில்லை என கூறப்பட்டது.
உடனடியாக ராஜசேகரை, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்த போது, ராஜசேகர் இறந்தது தெரியவந்தது. தகவல் அறிந்த ராஜமங்கலம் போலீசார், ராஜசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பிரேத பரிசோதனை அறிக்கையில், ராஜேசேகர் கழுத்தின் வலது பக்கத்தில் காயம் உள்ளது தெரியவந்தது. அவர் கழுத்து நெரித்து கொல்லப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர்.
இதில் ராஜசேகரின் மனைவி சித்ரா மற்றும் ராஜசேகர் ஓட்டிய லாரியின் உரிமையாளரான, செங்குன்றத்தைச் சேர்ந்த தனசேகர், 39, ஆகியோர் சேர்ந்து ராஜசேகரை கொன்றது தெரியவந்தது.
சம்பவத்தன்று போதையில் வீட்டிற்கு சென்ற ராஜசேகர், அங்கே முதலாளியான தனசேகர் இருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்தார். இதுகுறித்து மனைவியிடம் சண்டையிட்டுள்ளார். சண்டையை அவரது மகளும் நேரில் பார்த்துள்ளார்.
போலீஸ் விசாரணையின் போது, 'ராஜசேகர் வீட்டுக்கே செல்லவில்லை' என தனசேகர் கூறினார். ஆனால் அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில், ராஜசேகரின் வீட்டிற்கு தனசேகர் சென்றது தெரிந்தது.
சித்ராவும், கள்ளக்காதலனான தனசேகரும் சேர்ந்து, ராஜசேகரை கழுத்தை நெரித்து கொன்று விட்டு, அளவுக்கு அதிகமான போதையில் ராஜசேகர் இறந்ததாக நாடகமாடியுள்ளது, ராஜமங்கலம் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீசார், நேற்று சிறையில் அடைத்தனர்.