/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நண்பருக்குள் அடிதடி பைக் மாற்றி எரிப்பு
/
நண்பருக்குள் அடிதடி பைக் மாற்றி எரிப்பு
ADDED : செப் 28, 2024 12:32 AM
வியாசர்பாடி, சென்னை, வியாசர்பாடி, 'பி' கல்யாணபுரம் பகுதியை சேர்ந்தவர் அஜீத், 28. இவர், கடந்த 25ம் தேதி நள்ளிரவு, தன் இருசக்கர வாகனத்தை, வீட்டிற்கு அருகே நிறுத்தியிருந்தார். திடீரென அதிகாலையில் அஜீத் பைக் தீப்பற்றி எரிந்தது. அக்கம்பக்கத்தினர் தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். இதுகுறித்து வியாசர்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து நடத்திய விசாரணையில், வியாசர்பாடி, சி கல்யாணபுரம் பகுதியை சேர்ந்த விநாயகமூர்த்தி, 20 என்பவர் பைக்குக்கு தீ வைத்தது தெரியவந்தது.
வியாசர்பாடியை சேர்ந்த அப்புனு, 24 என்பவருக்கும், விநாயகமூர்த்திக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 25ம் தேதி இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அதில், விநாயகமூர்த்தியை அப்புனு தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த விநாயகமூர்த்தி, குடிபோதையில் அப்புனு பைக் என நினைத்து, அஜீத் பைக்கிற்கு தீ வைத்தது விசாரணையில் தெரியவந்தது.
விநாயகமூர்த்தியை நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.