ADDED : நவ 16, 2024 12:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை,
தாம்பரம் மாநகராட்சி பகுதி காலிமனைகளின் உரிமையாளர்கள், தங்களுக்கு சொந்தமான காலிமனைகளை சுத்தம் செய்து 15 நாட்களுக்குள் உரிய பாதுகாப்பு வேலி அமைக்காததால், குப்பை குவிந்து சுகாதார சீர்கேடு ஏற்பட்டது.
அந்த வகையில், தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 14,362 காலிமனைகள் உள்ளன. இங்கு, 10 நாட்களாக, 783 காலிமனை உரிமையாளர்களுக்கு 'நோட்டீஸ்' வழங்கினர்.
அதில், 148 காலிமனைகள் சுத்தம் செய்தனர். துாய்மை செய்யப்படாத 42 காலிமனைகளை மாநகராட்சி நிர்வாகமே சுத்தம் செய்து, அதன் உரிமையாளர்களுக்கு 1.41 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.