/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பல்லாவரம் மேம்பாலத்தில் இருவழிப்பாதை துவக்கம்
/
பல்லாவரம் மேம்பாலத்தில் இருவழிப்பாதை துவக்கம்
ADDED : ஜன 20, 2024 12:49 AM
பல்லாவரம், பல்லாவரத்தில், ஜி.எஸ்.டி., - குன்றத்துார் சாலைகள் சந்திப்பை, தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்துகின்றன. அந்த சந்திப்பில் ஏற்பட்டு வந்த போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, இரு பாதைகள் கொண்ட ஒரு வழி மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது.
குரோம்பேட்டையில் இருந்து சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள், மேம்பாலத்தில் ஏறி பாதுகாப்பு துறை குடியிருப்பு அருகே இறங்கின. கிண்டியில் இருந்து வரும் வாகனங்கள், வழக்கம் போல் ஜி.எஸ்.டி., சாலை வழியாகவே சென்றன.
ஆனால், மேம்பாலம் கட்டியும் நெரிசல் குறையவில்லை.
இதற்கு தீர்வாக, கிண்டியில் இருந்து வரும் வாகனங்களும் மேம்பாலத்தை பயன்படுத்தி செல்ல வழி வகை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது குறித்து, நம் நாளிதழில், சில நாட்களுக்கு முன் படத்துடன் செய்தி வெளியானது.
இதையடுத்து, மேம்பாலத்தை இருவழிப் பாதையாக மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேம்பாலத்தின் நடுவில் பிளாஸ்டிக் தடுப்பு பொருத்தப்பட்டு இருவழிப் பாதையாக மாற்றப்பட்டு, நேற்று முதல் போக்குவரத்து துவங்கப்பட்டுள்ளது. இதனால், பல்லாவரத்தில் நெரிசல் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.