/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேடு மெட்ரோ பணிமனையில் மின்னணுவியல் ஆய்வகம் திறப்பு
/
கோயம்பேடு மெட்ரோ பணிமனையில் மின்னணுவியல் ஆய்வகம் திறப்பு
கோயம்பேடு மெட்ரோ பணிமனையில் மின்னணுவியல் ஆய்வகம் திறப்பு
கோயம்பேடு மெட்ரோ பணிமனையில் மின்னணுவியல் ஆய்வகம் திறப்பு
ADDED : ஜன 07, 2024 12:40 AM

சென்னை, கோயம்பேடு மெட்ரோ பணிமனையில், நவீன மின்னணுவியல் ஆய்வகத்தை சென்னை மெட்ரோ ரயில் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று திறந்து வைத்தார்.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கோயம்பேடு மெட்ரோ ரயில் பணிமனையில், 50 லட்சம் ரூபாயில் அதிநவீன மின்னணுவியல் ஆய்வகம் அமைக்கும் பணிகள் சில மாதங்களாக நடைபெற்றன. இந்த பணிகள் முடிந்துள்ள நிலையில், இந்த ஆய்வகத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் இயக்குனர் ராஜேஷ் சதுர்வேதி நேற்று துவங்கிவைத்தார்.
இந்த ஆய்வகம் முற்றிலும் நவீன தொழில்நுட்ப பாதுகாப்புடன் இயங்குகிறது. மெட்ரோ ரயில் மற்றும் பிற அமைப்புகளின் மின்னணு கூறுகளுக்கான மேம்பட்ட ஆய்வு, சோதனை, சரிசெய்தல் மற்றும் பழுதுபார்க்கும் வசதி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
ரயில் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அமைப்பு, பயணியருக்கான அறிவிப்பு மற்றும் பொது தகவல் அமைப்பு, கதவு அமைப்பு, காற்றோட்ட அமைப்பு போன்றவற்றுக்கு தனிப்பட்ட சோதனை மற்றும் பணிநிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்கள் குழுவால் இந்த ஆய்வகம் நிர்வகிக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.