/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.7 கோடி மதிப்பு புது கட்டடங்கள் திறப்பு
/
ரூ.7 கோடி மதிப்பு புது கட்டடங்கள் திறப்பு
ADDED : மார் 15, 2024 12:25 AM
ராயபுரம், ராயபுரம் மண்டலம், 60வது வார்டு, இப்ராஹிம் தெருவிலுள்ள உருது பள்ளியில், 96.17 லட்சம் ரூபாய் செலவில், நான்கு வகுப்பறை கட்டடங்கள் புதிதாக கட்டப்பட்டன.
இதை, மத்திய சென்னை எம்.பி., தயாநிதி, அமைச்சர் சேகர்பாபு, மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர், நேற்று திறந்து வைத்தனர். இதேபோல், அங்கப்பன் தெருவில், 2 கோடியே 8 லட்சம் ரூபாயில் கட்டப்பட உள்ள பள்ளி கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினர்.
ராயபுரம் மண்டலம், 56வது வார்டு, பி.ஆர்.என்.கார்டன் பிரகாசம் சாலையில், 2.89 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம், 55வது வார்டிற்குட்பட்ட அப்பு மேஸ்திரி தெருவில், 1.47 கோடியில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை, மேயர் பிரியா நேற்று திறந்தார்.

