/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
ரூ.58.5 லட்சம் மதிப்பீட்டில் ஆறு மின்மாற்றிகள் திறப்பு
/
ரூ.58.5 லட்சம் மதிப்பீட்டில் ஆறு மின்மாற்றிகள் திறப்பு
ரூ.58.5 லட்சம் மதிப்பீட்டில் ஆறு மின்மாற்றிகள் திறப்பு
ரூ.58.5 லட்சம் மதிப்பீட்டில் ஆறு மின்மாற்றிகள் திறப்பு
ADDED : ஜூன் 28, 2025 01:38 AM
திருவொற்றியூர்:சென்னை, எண்ணுார், ஜோதி நகர், சாத்தாங்காடு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட பெரும்பாலான இடங்களில், குறைந்த மற்றும் அதிக மின் அழுத்தம் மற்றும் தொடர் மின் தடையால், மக்கள் சிரமமடைந்தனர். தீர்வாக, கூடுதல் மின்மாற்றிகள் அமைத்துக் கொடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.
அதன்படி, தமிழ்நாடு மின்சார வாரியத்தால், மின்மாற்றி ஒன்று, 9 லட்ச ரூபாய் செலவில், எண்ணுார், கார்கில் நகர், சத்தியமூர்த்தி நகர் ஆகிய ஆறு இடங்களில், 58.5 லட்ச ரூபாய் செலவில் அமைக்கப்பட்டன.
அதன் திறப்பு விழா, நேற்று மதியம் நடந்தது. இதில், திருவொற்றியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., கே.பி.சங்கர், மண்டல குழு தலைவர் தனியரசு உள்ளிட்டோர் திறந்து வைத்தனர்.
ஆறு மின்மாற்றிகள் மூலம், கூடுதலாக 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகளுக்கு, மின்பகிர்மானம் செய்யப்படும்.