/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
அகத்தீஸ்வரர் கோவிலில் பாலாலயம் துவக்கம்
/
அகத்தீஸ்வரர் கோவிலில் பாலாலயம் துவக்கம்
ADDED : ஜூலை 07, 2025 04:17 AM

திருவொற்றியூர்:அகத்தீஸ்வரர் கோவில், பொன்னியம்மன் கோவில், கும்பாபிஷேக பணிகளுக்கு புனரமைப்பு பணிகள் நடக்கவிருப்பதால், பாலாலய பூஜைகள் துவங்கின.
திருவொற்றியூர் தேரடியில், 2,000 ஆண்டுகள் பழமைவாய்ந்த அகத்தீஸ்வரர் உடனுறை அகிலாண்டேஸ்வரி கோவில் உள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் விரைவில் நடக்கவிருப்பதால், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதையொட்டி, கோவிலில் நேற்று பாலாலய பூஜைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன.
இன்று, மூலமந்திர ஹோமம், அத்தி பலகையில் பரிவார மூர்த்திகள் கண் திறப்பு, கடம் புறப்பாடு, பாலாலய அபிஷேகம் ஆகியவை நடக்கிறது.
பொன்னியம்மன் கோவில்
திருவொற்றியூர் - ஜீவன்லால் நகர், பொன்னியம்மன் கோவிலிலும், புரனமைப்பு பணிகள் நடக்கவிருப்பதால், பாலால பூஜைகள், சிறப்பு யாக சாலை, ஹோமத்துடன் துவங்கியது.
ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரிப்பில் உள்ள இவ்விரு கோவில்களிலும், ஆறு மாதங்களுக்கு திருப்பணிகள் முடிந்து கும்பாபிஷேகம் நடத்தப்பட உள்ளது. இதற்கான, ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் நற்சோணை தலைமையிலான, ஊழியர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.