/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மரம், இரும்பில் மட்டுமே சாய்வு தளம் மாநகராட்சியில் புது நடைமுறை
/
மரம், இரும்பில் மட்டுமே சாய்வு தளம் மாநகராட்சியில் புது நடைமுறை
மரம், இரும்பில் மட்டுமே சாய்வு தளம் மாநகராட்சியில் புது நடைமுறை
மரம், இரும்பில் மட்டுமே சாய்வு தளம் மாநகராட்சியில் புது நடைமுறை
ADDED : ஜூன் 13, 2025 09:24 PM
சென்னை:சாலையோரங்கள் மற்றும் நடைபாதைகளுடன், கட்டடங்களை இணைத்திடும் சாய்வுதளத்திற்கு, கட்டட கழிவு பயன்படுத்தி கட்டக்கூடாது என, மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை மாநகராட்சி வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறை:
சென்னையை துாய்மையாக பராமரிக்கும் வகையில் கட்டடம் மற்றும் இடிபாட்டு கழிவுகள் அகற்றுதல், பாதுகாப்பான கட்டுமானம் குறித்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, சாலை மற்றும் நடைபாதையில் குடியிருப்புகள், வணிக நிறுவன கட்டடங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்படும் சாய்வு தளத்திற்கு, உடைந்த செங்கற்கள், சுண்ணாம்பு, கட்டட கழிவுகள், மண் கலவைகள் போன்றவை பயன்படுத்தப்படுகிறது.
இதனால், துாசி பரவல் மற்றும் காற்று மாசு ஏற்படுகிறது. கட்டுமான கழிவு மற்றும் மண் துாசுகள் மழைநீர் வடிகால்வாய்களில் சேர்வதால், மழைநீர் தேங்கி நீர் ஓட்டத்தையும் தடை செய்கிறது. எனவே, சாய்வு தளத்திற்கு வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, கட்டட கழிவு, உடைந்த செங்கற்களை சாய்வு தள இணைப்புக்கு பயன்படுத்துதல் முற்றிலும் தடை செய்யப்படுகிறது. அதற்கு பதிலாக, மரம் அல்லது இரும்பு போன்ற சுற்றுச்சூழல் மாசுபாடு இல்லாத பொருட்களை பயன்படுத்தலாம்.
இந்த இணைப்புகள், பொது போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல், பாதுகாப்பாக பொருத்தப்பட்டிருக்க வேண்டும். மழைநீர் வடிகால்வாய் பராமரிப்புக்கு எவ்வித தடையும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும்.
இந்த வழிகாட்டு நெறிமுறைகள், ஜூன் 30ல் இருந்து நடைமுறைக்கு வருகிறது. அதன்பின், வழிகாட்டு நெறிமுறை பின்பற்றாதோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.