/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
செக்கின் கவுன்டர்கள் ஏர்போர்ட்டில் அதிகரிப்பு
/
செக்கின் கவுன்டர்கள் ஏர்போர்ட்டில் அதிகரிப்பு
ADDED : மார் 22, 2025 12:32 AM
சென்னை, சென்னை விமான நிலையத்தில் தினமும், 50,000த்திற்கும் மேற்பட்ட பயணியர் வந்து செல்கின்றனர். இந்த எண்ணிக்கை, கோடை விடுமுறை நாட்களில் அதிகரிக்கும்.
அதிலும் பலர், வெளிநாடுகள் செல்ல ஆர்வம் காட்டுவர். இதனால் விமான நிலைய செக்கின் கவுன்டர்களில், கூட்டம் அதிகமாக இருக்கும்.
பாதுகாப்பு சோதனைகள் நடத்தக்கூடிய கவுன்டர்கள் தற்போது, ஏ, பி, சி என, மூன்று பிரிவுகளாக உள்ளது. இதில் ஒரு பிரிவுக்கு 24 என, 72 கவுன்டர்கள் உள்ளன.
கவுன்டர்கள் குறைவாக இருப்பதால் சோதனைகளை முடித்து, விமானத்தில் ஏற பயணியர் நீண்ட நேரம் ஆகிறது.
கோடை விடுமுறை துவங்க உள்ளதால், கூடுதல் செக்கின் கவுன்டர்களை அமைக்க, விமான நிலைய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். இரண்டாவது முனைய செக்கின் கவுன்டர்கள், 120 ஆக உயர்த்தும் பணி நடந்து வருகிறது.
முதற்கட்டமாக சோதனை அடிப்படையில், ஏர் இந்தியா, எமிரேட்ஸ், இண்டிகோ, சர்வதேச விமான பயணியர் மட்டும், இந்த கூடுதல் செக்கின் கவுன்டர்களை பயன்படுத்தி வருகின்றனர்.
படிப்படியாக மற்ற நாடுகளுக்கு செல்லும் விமான நிறுவனங்களும், கூடுதல் கவுன்டர்களை பயன்படுத்துவர் என, விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.