/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
வேளச்சேரி, தரமணியில் சேர்க்கை அதிகரிப்பு சேவா நகரில் புதிய பள்ளி கட்ட வலியுறுத்தல்
/
வேளச்சேரி, தரமணியில் சேர்க்கை அதிகரிப்பு சேவா நகரில் புதிய பள்ளி கட்ட வலியுறுத்தல்
வேளச்சேரி, தரமணியில் சேர்க்கை அதிகரிப்பு சேவா நகரில் புதிய பள்ளி கட்ட வலியுறுத்தல்
வேளச்சேரி, தரமணியில் சேர்க்கை அதிகரிப்பு சேவா நகரில் புதிய பள்ளி கட்ட வலியுறுத்தல்
ADDED : ஏப் 17, 2025 11:44 PM
வேளச்சேரி,அடையாறு மண்டலத்தில், வேளச்சேரி, தரமணி பகுதியை உள்ளடக்கிய, 175, 176, 177, 178 ஆகிய வார்டுகளில், 2.20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த நான்கு வார்டுகளுக்கும் சேர்த்து, மொத்தம் மூன்று அரசு பள்ளிகளே உள்ளன.
தரமணி மாநகராட்சி பள்ளியில், 800 மாணவர்கள், 700 மாணவியர் படிக்கின்றனர். வேளச்சேரி மாநகராட்சி பள்ளியில், 830 மாணவர்கள், 710 மாணவியர் மற்றும் வேளச்சேரி அரசு பள்ளியில் 950 மாணவர்கள், 680 மாணவியர் என, மொத்தம் 4,670 பேர் படிக்கின்றனர்.
ஒவ்வொரு பள்ளியிலும், போதிய இடவசதி இல்லை. பள்ளியின் கொள்ளளவை மீறி மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.
மாணவர்கள் விளையாடும் இடங்களைக் கூட வகுப்பறை கட்டியுள்ளனர். ஒவ்வொரு கல்வியாண்டிலும் இடவசதி இல்லாமல், சைதாப்பேட்டை, அடையாறு போன்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது.
வேளச்சேரி சேவா நகரில், ஒரு ஏக்கருக்கு மேல் பரப்பு கொண்ட அரசு இடம் உள்ளது. அதில், மாநகராட்சி சார்பில் பள்ளி கட்டினால், நான்கு வார்டுகளை சேர்ந்த ஏழை, நடுத்தர குடும்பத்தில் உள்ள மாணவ - மாணவியர் பயன் அடைவர்.
இது குறித்து, வேளச்சேரி, தரமணி பகுதி நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:
வேளச்சேரியில் ஓ.எஸ்.ஆர்., இடங்கள் உள்ளன. அதில் பூங்கா, விளையாட்டு மைதானம் அமைக்க முடியும். பள்ளி கட்டடம் கட்ட முடியாது.
வேளச்சேரி, தரமணி பகுதியில் பள்ளிக்கூடம் கட்டும் வகையில், அரசு இடங்கள் இல்லை. சேவா நகர் பகுதியில் உள்ள அரசு இடத்தில் பள்ளிக்கூடம் கட்டினால், தற்போதுள்ள பள்ளிகளில் ஏற்படும் நெருக்கடி குறையும். அதிக எண்ணிக்கையில் மாணவ - மாணவியரைச் சேர்க்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, 'பள்ளிக்கூடம் கட்ட இடம் தேடி வருகிறோம். ஓ.எஸ்.ஆர்., இடங்கள் உள்ளன. அதில் கட்டடம் கட்ட முடியாது. சேவா நகர் இடத்தில் பள்ளிக்கூடம் கட்டலாமா என, ஆலோசித்து வருகிறோம்' என்றனர்.