/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
நிலத்தடி நீரில் உப்பு அதிகரிப்பு சத்யா நகர் மக்கள் அவதி
/
நிலத்தடி நீரில் உப்பு அதிகரிப்பு சத்யா நகர் மக்கள் அவதி
நிலத்தடி நீரில் உப்பு அதிகரிப்பு சத்யா நகர் மக்கள் அவதி
நிலத்தடி நீரில் உப்பு அதிகரிப்பு சத்யா நகர் மக்கள் அவதி
ADDED : நவ 24, 2025 03:47 AM

ஆவடி: ஆவடி மாநகராட்சி, அண்ணனுார் 31வது வார்டு, அன்னை சத்யா நகரில் உள்ள 12 தெருக்களில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி நிலத்தடி நீரில் உப்பு தன்மை அதிகரித்துள்ளது.
இதனால், சுத்தமான தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக அவதியடைந்து வருகின்றனர். நீரில் உப்பு தன்மையால் முடி கொட்டுவது மற்றும் தோல் தொடர்பான பிரச்னையால் சிரமம் அடைகின்றனர்.
ஆவடி மாநகராட்சி சார்பில், எட்டு நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வினியோகிக்கப்படுகிறது. பொதுமக்கள், அந்த தண்ணீரை பிளாஸ்டிக் டிரம்களில் பிடித்து வைத்து, துணி துவைக்க, பாத்திரம் கழுவ பயன்படுத்தி வருகின்றனர்.
குடிப்பதற்கு தனியார் டிராக்டரில் வரும் தண்ணீரை குடம் 8 ரூபாய்க்கும், கேன் குடிநீர் 30 ரூபாய்க்கும் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
எனவே, மாநகராட்சி அதிகாரிகள் சத்யா நகரில் உள்ள மக்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைத்து, குழாயில் நன்னீர் மற்றும் இலவச ஆர்.ஓ., குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

