/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
கோயம்பேட்டில் கரும்பு வரத்து அதிகரிப்பு
/
கோயம்பேட்டில் கரும்பு வரத்து அதிகரிப்பு
ADDED : ஜன 14, 2024 02:33 AM
கோயம்பேடு, கோயம்பேடு சந்தையில் கரும்பு வரத்து அதிகரித்த நிலையில், கடந்த ஆண்டை விட கரும்பு விலை இந்த ஆண்டு அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
கோயம்பேடு சந்தை வளாகத்தில் பொங்கல் சிறப்புச் சந்தை 17 ம் தேதி வரை செயல்பட உள்ளது. பொங்கல் நெருங்கிவிட்ட நிலையில், விழாவுக்கு தேவையான பொருட்களை வாங்க மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சிறுவியாபாரிகள் மற்றும் நுகர்வோர்கள் அதிக அளவில் குவிந்தனர். இதனால் கோயம்பேடு சந்தை நேற்று பரபரப்பாக காணப்பட்டது.
பொங்கல் பண்டிகையை ஒட்டி, கோயம்பேடு மார்க்கெட்டிற்கு, சேலம், மதுரை, தேனி ஆகிய பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம், கரும்புகள் கொண்டு வரப்படுகிறது.
இதையடுத்து, கோயம்பேடு சந்தைக்கு நேற்று 120 லாரி கரும்புகள் வந்துள்ளன. இதில், 15 எண்ணிக்கை கொண்ட ஒரு கட்டு கரும்பு 400 - 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த ஆண்டு ஒரு கரும்பு 20 - 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு 30 - 60 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
மேலும், அரியலுார், திருச்சி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மஞ்சள் வரத்துள்ளது. இதில், 15 செடிகள் கொண்ட மஞ்சள் கொத்து, 100 - 300 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 1 செடி கொண்ட மஞ்சள் கொத்து 15 ரூபாய்க்கும், இச்சி கொத்து ஒன்று, 30 ரூபாய்க்கும் விற்பனையானது.

