/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.20 ஆக விலை குறைவு
/
பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.20 ஆக விலை குறைவு
பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.20 ஆக விலை குறைவு
பெரிய வெங்காயம் வரத்து அதிகரிப்பு கிலோ ரூ.20 ஆக விலை குறைவு
ADDED : ஜூன் 20, 2025 12:39 AM
சென்னை, பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால், அவற்றின் விலை கிலோ 20 ரூபாயாக குறைந்துள்ளது.
மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் பெரிய வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது.
கடந்தாண்டு டிசம்பர், நடப்பாண்டு ஜனவரிக்கு பின் சாகுபடி செய்யப்பட்ட வெங்காயம் அறுவடை செய்து, பதப்படுத்தப்பட்டு கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. தேவைக்கேற்ப அவை விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
கரிப் பருவத்தில் புதிதாக வெங்காயம் சாகுபடி செய்வதற்கு மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளன.
இதையடுத்து, சாகுபடிக்கான ஏற்பாடுகளில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். இதனால், கையிருப்பில் உள்ள வெங்காயம், அதிகம் விற்பனைக்கு அனுப்பபடுகிறது. புதிதாக அறுவடை செய்யப்படும் வெங்காயத்தை பதப்படுத்தும் பணிகள் நடந்து வருகிறது.
இதன் எதிரொலியாக சந்தைகளுக்கு பெரிய வெங்காயம் வரத்து அதிகரித்து வருகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு நாள்தோறும் 80க்கும் மேற்பட்ட லாரிகளில் வெங்காயம் வரத்து உள்ளது. இதன் காரணமாக, பெரிய வெங்காயத்தின் விலை கிலோ 30 ரூபாயில் இருந்து 20 ரூபாயாக குறைந்துள்ளது.
***