/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
சுதந்திர தின ஒத்திகை போக்குவரத்து மாற்றம்
/
சுதந்திர தின ஒத்திகை போக்குவரத்து மாற்றம்
ADDED : ஆக 07, 2025 12:34 AM
சென்னை, சென்னை, கோட்டையில் சுதந்திர தினவிழா, 15ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, நாளை, 11, 13 ஆகிய மூன்று நாட்கள் ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது.
காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சுதந்திர தின விழா ஒத்திகை நிகழ்ச்சி நடக்கும் நாட்களில், காலை 6:00 மணி முதல் ஒத்திகை முடியும் வரை, மெரினாவில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும்.
* உழைப்பாளர் சிலை முதல் ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை வரையிலான காமராஜர் சாலை, ராஜாஜி சாலை மற்றும் கொடி மரச்சாலைகளில், போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்படும்
* காமராஜர் சாலையில் இருந்து ராஜாஜி சாலை வழியாக பாரிமுனையை நோக்கி செல்லும் அனைத்து வாகனங்களும், உழைப்பாளர் சிலையிலிருந்து வாலாஜா சாலை - அண்ணாசாலை - முத்துசாமி பாலம் வழியாக பாரிமுனைக்கு செல்லலாம்.
* அண்ணா சாலையில் இருந்து பாரீஸ் கார்னர் நோக்கிச் செல்லும் வாகனங்கள், முத்துசாமி பாலம், முத்துசாமி சாலை, ராஜா அண்ணாமலை மன்றம், வடக்கு கோட்டை பக்க சாலை வழியாக பாரீஸ் கார்னர் செல்லலாம்.
* ராஜாஜி சாலையில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்ல, பாரிமுனை, வடக்கு கோட்டை பக்க சாலை, முத்துசாமி சாலை, முத்துசாமி பாலம், அண்ணாசாலை, வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை அடையலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.