/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
எம்.சி.சி., முருகப்பா ஹாக்கி இந்திய கடற்படை அணி வெற்றி
/
எம்.சி.சி., முருகப்பா ஹாக்கி இந்திய கடற்படை அணி வெற்றி
எம்.சி.சி., முருகப்பா ஹாக்கி இந்திய கடற்படை அணி வெற்றி
எம்.சி.சி., முருகப்பா ஹாக்கி இந்திய கடற்படை அணி வெற்றி
ADDED : ஜூலை 17, 2025 11:54 PM

சென்னை,சென்னை எம்.சி.சி., முருகப்பா ஹாக்கி போட்டியில், இந்திய கடற்படை அணி 4 - 1 என்ற கோல் கணக்கில், மத்திய நேரடி வரி வாரியம் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
'எம்.சி.சி., முருகப்பாகுருப்ஸ்' சார்பில், அகில இந்திய அளவில், 96வது முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கி தொடர், ராதாகிருஷ்ணன் ஹாக்கி அரங்கில் நடக்கிறது.
நேற்று முன்தினம் நடந்த 'பி' பிரிவு போட்டியில், இந்திய கடற்படை அணி, மத்திய நேரடி வரி வாரியம் அணியை எதிர் கொண்டது.
விறுவிறுப்பான அப்போட்டியில், இந்திய கடற்படை அணியின் அசத்தலான ஆட்டத்தால், எதிர்த்து விளையாடிய மத்திய நேரடி வரி வாரியம் அணியை, 4 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி, வெற்றியை பதிவு செய்தது.
இந்திய கடற்படை அணி சார்பில், அஜின்க்யா ஜாதவ், செல்வராஜ் ஆகியோர் தலா இரண்டு கோல் அடித்து அசத்தினர். மத்திய நேரடி வரி வாரியம் அணி சார்பில், மெஹ்கீத் சிங் மட்டும் ஒரு கோல் அடித்து ஆறுதல் தந்தார்.
மற்றொரு போட்டியில், இந்திய ராணுவ அணி 2 - 1என்ற கோல் கணக்கில், ஹாக்கி மஹாராஷ்டிரா அணியை வீழ்த்தியது.
இந்திய ராணுவ அணி சார்பில், பிரதீப் சிங் பிஸ்ட், நிராஜ் குமார் சிங் ஆகியோர் தலா ஒரு கோல் அடித்தனர். மஹாராஷ்டிரா அணி சார்பில், கணேஷ் பாட்டீல் ஒரு கோல் அடித்தார்.