/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
மின்சார ரயிலில் பச்சிளம் குழந்தை மீட்பு
/
மின்சார ரயிலில் பச்சிளம் குழந்தை மீட்பு
ADDED : நவ 12, 2025 12:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை, மின்சார ரயிலில் இருந்து, ரயில்வே போலீசார் மீட்டனர்.
திருவள்ளூரில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு, நேற்று மாலை ஒரு மின்சார ரயில் வந்தது. ரயில் இன்ஜினில் இருந்து ஆறாவது பெட்டியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது.
பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார், பெண் குழந்தையை மீட்டு, எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தனர். மருத்துவ பரிசோதனைக்கு பின், குழந்தைகள் நல குழுமத்தினர் உதவியுடன், காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
பிறந்து 15 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை ரயிலில் விட்டுச் சென்ற நபர் குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

