UPDATED : அக் 23, 2026 08:32 PM
ADDED : அக் 23, 2026 08:26 PM
அ நிறம் | அளவு
‘‘சென்னையில், மழைக்கால நோய்களை தடுக்க இதுவரை 800 சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், 27 ஆயிரத்து, 150 பேர் பயனடைந்துள்ளனர்.
சில பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், தொற்றுநோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே, பொதுமக்கள் கவனமாக இருந்து, அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும்.
குடிநீரைக் காய்ச்சி குடிக்க வேண்டும். குடிநீரின் தரத்தை சரிசெய்ய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
செவிலியர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து அதிகாரிகளையும், என்னையும் சந்தித்து பேசலாம்; நியாயமான கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும்.
– அருண்ராஜ்,
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர்.
