ADDED : ஜன 02, 2025 12:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பத்துார், ஆவடி ஆயுதபடையில் இன்ஸ்பெக்டராக இருப்பவர் அசோக்குமார். இவர், நேற்று மாலை சென்னை பாடியிலிருந்து ஆவடி நோக்கி சென்னை திருப்பதி நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது சாலையின் குறுக்கே முதியவர் ஒருவர் கடக்க முயன்ற போது, கார் முதியவர் மீது மோதாமல் இருக்க சாலையின் பக்கவாட்டில் காரை திருப்பி உள்ளார். இதில், சாலையோரம் நிறுத்தப்பட்ட மூன்று பைக் மீது கார் மோதியது. மேலும், கொரட்டூரை சேர்ந்த சிவா, 65 என்ற முதியவர் மீதும் கார் மோதியது. காயமடைந்த சிவாவை அருகே இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செங்குன்றம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.

